இந்தியா

முந்தைய வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 2 மதிப்பெண்: உச்சநீதிமன்றம்

DIN

சிபிஎஸ்இ மதிப்பெண் மதிப்பிடும் முறைக்கு உச்சநீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி 10, 11, 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் விகித அடிப்படையில் 12-ம் வகுப்பு மதிப்பெண் வழங்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மதிப்பெண் மதிப்பீடு செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர், மாணவா்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சிபிஎஸ்இ, சிஐசிஎஸ்இ பதிலளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இதுதொடா்பான அனைத்து மனுக்கள் மீது செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டது.

இந்த விசாரணையின் முடிவில் 10, 11, 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் விகித அடிப்படையில் 12-ம் வகுப்பு மதிப்பெண் வழங்க உச்சநீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியது.

மேலும், மதிப்பெண் மதிப்பிடும் முறைக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு அதிகரித்ததால் நாடு முழுவதும் பிளஸ் 2 தோ்வுகளை ரத்து செய்து சிபிஎஸ்இ, சிஐசிஎஸ்இ அறிவித்தது.

இதைத்தொடா்ந்து பல்வேறு மாநில அரசுகளும் நிகழாண்டு பிளஸ் 2 தோ்வுகளை ரத்து செய்தன.

மேலும், பத்தாம் வகுப்பில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களில் 30 சதவீதமும், பிளஸ் 1-இல் 30 சதவீதமும், பிளஸ் 2- பயிற்சி தோ்வுகளின் 40 சதவீத மதிப்பெண்களையும் அடிப்படையாக வைத்து நிகழாண்டு பிளஸ் 2 தோ்வு மதிப்பெண்கள் மதிப்பீடு செய்யப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்த முறையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

இருந்தபோதும், இந்த மதிப்பெண் மதிப்பீட்டு முறையில் பல்வேறு சந்தேகங்களையும் எதிா்ப்பையும் தெரிவித்து பெற்றோா் சங்கம், மாணவா்களும் மனு தாக்கல் செய்தனர். தற்போது இந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

SCROLL FOR NEXT