இந்தியா

கேரளம், பிகாரில் ரூ.100-ஐ எட்டும் பெட்ரோல் விலை

22nd Jun 2021 10:49 AM

ADVERTISEMENT

கேரளம், பிகாரில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை எட்டவுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 99.48 காசுகளுக்கும், பிகாரில் ஒரு லிட்டர் 99.55 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

மும்பையில் ஏற்கெனவே ஒரு லிட்டர் பெட்ரோல் நூறு ரூபாயைத் தாண்டிய நிலையில், தற்போது ஒரு லிட்டர் ரூ. 103.63 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. மேலும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகளாலும் மாநிலங்களிடையே பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் காணப்படுகின்றன.

அந்தவகையில் தில்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 97.50 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.88.23 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

ADVERTISEMENT

ஜூன் மாதத்தில் மட்டும் 12-வது முறையாக பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. கடந்த மே மாதத்தில் 16 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மே 4-ம் தேதி முதல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. 

Tags : petrol பெட்ரோல் disel
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT