இந்தியா

மாநிலங்களிடம் 2.14 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன: மத்திய அரசு

DIN


மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் இன்னும் 2.14 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

செவ்வாய்க்கிழமை காலை 7 மணி வரையிலான தடுப்பூசி நிலவரம் குறித்த தகவல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

"கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக 86.16 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. உலகளவில் ஒரேநாளில் 86 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவது இதுவே முதன்முறை.

நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 28.87 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.  

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நேரடிக் கொள்முதல் மூலம் உள்பட மொத்தம் 29.35 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் வீணானவை உள்பட மொத்தம் 27,20,14,523 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

மாநிலங்களின் கையிருப்பில் இன்னும் 2.14 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் உள்ளன. மேலும் 33,80,590 தடுப்பூசிகள் அடுத்த 3 நாள்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்படவுள்ளன."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT