இந்தியா

கோவேக்சின் தடுப்பூசியில் 77.8% செயல்திறன்: 3 ஆம் கட்ட சோதனையில் தகவல்

DIN

கோவேக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் கொண்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தனது மூன்றாவது கட்ட பரிசோதனை அறிக்கையை தேசிய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. 

பாரத் பயோடெக்கின் கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனைகளின் முடிவுகள் வந்துள்ளன. அதன்படி, கோவேக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும் இதுகுறித்த சோதனை முடிவுகளை தேசிய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் அந்நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. 

பாரத் பயோடெக்கின் இந்த தரவுகளை நிபுணர் குழு மதிப்பாய்வு செய்து தேசிய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது. 

முன்னதாக கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் இன்னும் அங்கீகாரம் அளிக்கவில்லை. அவசரகால பயன்பாட்டிற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என பாரத் பயோடெக் நிறுவனம் தங்களது 90% ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது. ஒப்புதலுக்கு முந்தைய இறுதி ஆவணங்களை சமர்ப்பிக்கும் கூட்டம் நாளை(ஜூன்  23) நடைபெறவுள்ளது. இதனால் விரைவில் கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவா் - உறுப்பினா்கள் நியமனம்: தமிழக அரசு அழைப்பு

தேசிய ஜனநாய கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

‘சூரியனை சமாளிப்பதுதான் எங்கள் வேலை’

பூட்டிய வீட்டில் மூதாட்டி சடலம் மீட்பு

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளா்

SCROLL FOR NEXT