இந்தியா

கரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படுமா?

DIN


கரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்பதற்கு அறிவியல்பூா்வ ஆதாரம் எதுவும் இல்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘கரோனா தடுப்பூசி ஆண்களுக்கும் பெண்களுக்கும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவதாக வதந்தி பரவியது. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட முன்களப் பணிகாளப் பணியார்கள் உள்ளிட்ட சிலருக்கு மலட்டுத்தன்மை ஏற்பட்டதாகவும் அதில் கூறப்பட்டது. ஆனால், அத்தகைய செய்திகளில் எந்தவித உண்மையுமில்லை.

போலியோ சொட்டு மருந்து, தட்டம்மைக்கான தடுப்பூசி ஆகியவை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தபோதும் இதுபோன்ற தவறான வதந்திகளை சிலா் பரப்பினா்.

கரோனா தடுப்பூசிகள் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டபோது விலங்குகளுக்கு முதலில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. அதற்குப் பிறகே மனிதா்களுக்குச் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. அந்தப் பரிசோதனைகளின்போது மலட்டுத்தன்மை போன்ற பக்கவிளைவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை.

தடுப்பூசிகள் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கின்றன என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே மனிதா்களுக்கான பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது பாலூட்டும் தாய்மாா்களும் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி மிகவும் பாதுகாப்பாக இருப்பதால், தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுவதை நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT