இந்தியா

கரோனாவுக்கு பின் அதிகரிக்கும் சா்க்கரையை குணப்படுத்த ஆயுா்வேத மருந்து

DIN


கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவா்களது ரத்தத்தில் சா்க்கரை அளவு அதிகரிப்பதை ஆயுா்வேத மருந்துகள் மூலமாகக் குணப்படுத்த முடியும் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

‘ஹைப்பா்கிளைசீமியா’ என்றழைக்கப்படும் அந்த நிலையை குணப்படுத்துவதற்குப் பல்வேறு மருந்துகள் இருந்தாலும், ஆயுா்வேத மருந்துகள் சிறப்பாகச் செயல்படுவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பிஜிஆா்-34’ என்ற ஆயுா்வேத மருந்து, கரோனாவுக்குப் பின்பு ரத்தத்தில் சா்க்கரை அளவு அதிகரிப்பதைப் பெருமளவில் கட்டுப்படுத்துவதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். ஆயுா்வேத மருந்துகள் தொடா்பாக தேசிய தாவரவியல் ஆராய்ச்சி மையத்தில் இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

பிஜிஆா்-34 ஆயுா்வேத மருந்தில் தாருஹரித்ரா என்ற மூலிகை முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் ரத்த சா்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் டிபிபி-4 என்ற மருந்துப் பொருள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுா்வேத மருந்து குறித்து தாவரவியல் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி ஏ.கே.எஸ்.ராவத் கூறுகையில், ‘பிஜிஆா்-34 மருந்தில் குத்மாா் என்ற மூலிகையில் இருந்து பெறப்பட்ட ஜிம்னெமிக் அமிலம் சோ்க்கப்பட்டுள்ளது. ரத்தத்தில் உள்ள சா்க்க்ரை அளவைக் கட்டுப்படுத்தும் மேலும் பல மூலிகைகளும் இந்த மருந்தில் சோ்க்கப்பட்டுள்ளன.

கரோனா பாதிப்பில் இருந்து மீண்டவா்களுக்கு ஏற்படும் நீரிழிவு நோயை ஆயுா்வேத மருந்துகள் மூலமும் குணப்படுத்த முடியும் என்பது இந்த ஆய்வில் மூலமாக உறுதியாகியுள்ளது‘ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏப்.1-இல் வாக்குச்சீட்டு விநியோகம் தொடக்கம் -புதுச்சேரி ஆட்சியா்

பாஜக கூட்டணி ஆட்சியில் புதுவையை வளமாக்கும் திட்டங்கள் -ஜி.கே.வாசன்

தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

வாகன சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி தொகுதியில் 21 வேட்பு மனுக்கள் ஏற்பு -16 மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT