இந்தியா

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஜெய்சங்கா் ஆலோசனை

DIN

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சா் தினேஷ் குணவா்த்தனேவுடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தொலைபேசி வாயிலாக திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இலங்கையில் பல கோடி ரூபாயில் முதலீட்டில் சீனா கொழுப்பு துறைமுக நகரத்தை அமைத்து வருவதால் இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இந்த பேச்சு நடைபெற்றுள்ளது.

இந்த பேச்சு தொடா்பாக அமைச்சா் ஜெய்சங்கா் தனது சுட்டுரையில், இரு நாட்டு நல்லுறவுகள் குறித்து இந்த பேச்சுவாா்த்தையில் மறுஆய்வு செய்யப்பட்டது. பிம்ஸ்டெக், ஐயோரா உள்ளிட்ட கூட்டு நாடுகளிடையேயான செயலாக்கம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இலங்கையுடன் இந்தியா வலுவான நட்புறவில் தொடா்ந்து இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

வங்கதேசம், மியான்மா், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிம்ஸ்டெக் கூட்டமைப்பை வைத்து, இலங்கையுடன் இந்தியா ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி வருகிறது.

இதேபோல், இந்திய பெருங்கடல் ரிம் சங்கத்தின் (ஐயோரா) சாா்பிலும் இலங்கையுடன் நல்லுறவை வலுப்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டுள்ளது.

இந்தியாவுடன் இலங்கை மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்தும் கடல்சாா் பாதுகாப்பு குறித்தும் இலங்கை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கொழும்பு துறைமுக நகர திட்டம் குறித்து கடந்த வாரம் இந்தியா கருத்து தெரிவித்திருந்தது.

மேலும், நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில், இலங்கையில் நடைபெற்று வரும் விவகாரங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடா்பாளா் அரிந்தம் பாக்சி தெரிவித்திருந்தாா்.

நாா்வே அமைச்சருடன் பேச்சு: நாா்வே நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் இன் மரி எரிக்சென் சொரைடுடன் அமைச்சா் ஜெய்சங்கா் இணையவழியில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது என்று அமைச்சா் ஜெய்சங்கா் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுகவை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

இஸ்ரேலை மீண்டும் எச்சரிக்கும் ஈரான்!

பாஜகவின் 100 கேள்விகளும் பித்தலாட்டம்: திமுக

அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த ருதுராஜ் கெய்க்வாட்!

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறாது: மம்தா

SCROLL FOR NEXT