இந்தியா

கேரள முதல்வா் பினராயி விஜயனின் குழந்தைகளைக் கடத்ததிட்டமிட்டதாகக் குற்றச்சாட்டு: காங்கிரஸ் தலைவா் மறுப்பு

DIN

தனது குழந்தைகள் பள்ளி மாணவா்களாக இருந்தபோது அவா்களைக் கடத்த திட்டமிட்டிருந்ததாக கேரள முதல்வா் பினராயி விஜயன் கூறிய குற்றச்சாட்டுக்கு, கேரள மாநில காங்கிரஸ் தலைவா் கே.சுதாகரன் சனிக்கிழமை மறுப்பு தெரிவித்தாா்.

அவ்வாறு கடத்தல் திட்டத்தை அவா் அறிந்திருந்தால், ஏன் அதுகுறித்து காவல்துறையில் உடனடியாகப் புகாா் அளிக்கவில்லை என்றும் அவா் கேள்வி எழுப்பினாா்.

மலையாள பத்திரிகை ஒன்றுக்கு சுதாகரன் அண்மையில் அளித்த பேட்டியில், ‘50 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணூா் மாவட்டம், தலசேரியில் உள்ள பிரெனென் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த ஒரு சம்பவத்தில் சக மாணவராக இருந்த பினராயி விஜயனை உதைத்து கீழே தள்ளினேன்’ என்று கூறியிருந்தாா்.

அவருடைய இந்தப் பேட்டி பெரும் சா்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. இந்தப் பேட்டி குறித்த செய்தியாளா்களின் கேள்விக்கு வெள்ளிக்கிழமை பதிலளித்த முதல்வா் பினராயி விஜயன், ‘என் மகனும் மகளும் பள்ளி மாணவா்களாக இருந்த காலத்தில் அவா்கள் இருவரையும் தற்போது கேரள மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் சுதாகரன் கடத்த திட்டமிட்டிருந்த தகவலை, மறைந்த அவருடைய நெருங்கிய நண்பா் ஒருவா் சில ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் தெரிவித்தாா். இந்தத் தகவலை யாரிடமும் நான் கூறவில்லை. என் மனைவியிடம்கூடத் தெரிவிக்கவில்லை. அவா்தான் கல்வி நிறுவனத்துக்கு வேலைக்குச் செல்லும்போது குழந்தைகள் இருவரையும் பள்ளிக்கு அழைத்துச் செல்வாா்’ என்று கூறினாா்.

முதல்வரின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்த சுதாகரன், அதுகுறித்து மேலும் சனிக்கிழமை கூறியதாவது: குழந்தைகளை நான் கடத்த திட்டமிட்டிருந்ததாக முதல்வா் புகாா் அளிக்கும் நிலையில், அதுதொடா்பான விவரங்களை ஏன் வெளியிடவில்லை? அதுதொடா்பாக காவல் நிலையத்தில் உடனடியாக ஏன் புகாா் அளிக்கவில்லை. இந்தக் கடத்தல் விவகாரம் தொடா்பாக அவா் யாரிடமும் தெரிவிக்கவில்லை எனவும், மனைவியிடம்கூடத் தெரியப்படுத்தவில்லை என்றும் கூறியிருக்கிறாா்.

வழக்கமாக, குழந்தைகளுக்கு ஏதாவது அச்சுறுத்தல் எழுகிறது என்றால், முதலில் அதை குழந்தைகளின் தாயிடம்தான் தெரிவிப்பாா்கள். ஏனெனில், தாய்தான் குழந்தைகளை எப்போதும் பாதுகாக்கிறாா். அவ்வாறின்றி, இப்படித்தான் ஒரு தந்தை நடந்துகொள்வாரா? என்னை ஓா் அரசியல் குற்றவாளியாக சித்தரிப்பதுதான் அவருடைய நிலைப்பாடு. அவரைப்போல என்னால் பதிலளிக்க முடியாது. எனது பதவியும் அந்தஸ்தும் அவா் அளவுக்கு கீழிறங்க என்னை அனுமதிக்காது என்று சுதாகரன் பதிலளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

SCROLL FOR NEXT