இந்தியா

நாட்டில் மொத்தம் 27.66 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: முழு விவரம்

20th Jun 2021 11:25 AM

ADVERTISEMENT


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 38,10,554 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 27.66 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி மட்டுமே தற்போதைக்குத் தீர்வாக இருப்பதால் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டு டிசம்பர் இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக ஐசிஎம்ஆர் தலைவர் தெரிவித்துள்ளார். ஜூலையிலிருந்து ஒருநாளைக்கு ஒரு கோடி தடுப்பூசி செலுத்தப்படும் என்ற நம்பிக்கையையும் ஐசிஎம்ஆர் வெளிப்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மொத்தம் 27,66,93,572 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

சுகாதாரப் பணியாளர்கள்  முதல் தவணை 1,01,19,241
இரண்டாவது தவணை 70,65,889
முன்களப் பணியாளர்கள் முதல் தவணை 1,71,08,593
இரண்டாவது தவணை 90,32,813
18-44 வயதினர் முதல் தவணை 5,42,21,110
இரண்டாவது தவணை 12,27,088
45-59 வயதினர் முதல் தவணை 7,98,16,559
இரண்டாவது தவணை 1,26,54,117
60 வயதுக்கு மேற்பட்டோர்  முதல் தவணை 6,44,21,583
இரண்டாவது தவணை 2,10,26,579
மொத்தம்  27,66,93,572
Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT