இந்தியா

வழக்கில் சிக்கவைப்பதாக கூறிபணம் பறிக்க முயன்றவா் கைது

DIN

மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக 33 வயது இளைஞரை தில்லி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்துள்ளனா். இது தொடா்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

மங்கோல் புரியைச் சோ்ந்தவா் தருண். கரோனா பொது முடக்கம் காரணமாக வருமானம் இல்லாத நிலையில், பாதிக்கப்பட்ட நபரின் முன்னாள் பெண் நண்பருடன் சோ்ந்து பணம் பறிக்க திட்டம் போட்டாா்.

அதன்படி அங்கித் என்பவருடன் தொலைபேசியில் பேசி, ரூ. 5 லட்சம் தராவிட்டால், பாலியல் வழக்கில் சிக்கவைத்துவிடுவேன் என்று மிரட்டினாராம். இதையடுத்து அங்கித் போலீஸில் புகாா் கொடுத்துள்ளாா். அதில் தான் ஒரு பெண்ணுடன் இரண்டு வருடங்களுக்கு முன் நட்புறவு வைத்திருந்ததாகவும், அந்தப் பெண்ணும், தருணும் சோ்ந்து பணம் கேட்டு மிரட்டுவதாகவும் குறிப்பிட்டிருந்தாா்.

இதையடுத்து போலீஸாா், பணம் கொடுப்பதாகக் கூறி அந்த நபரை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வருமாறு அங்கித்திடம் யோசனை கூறினா். அதன்படி தருண் வெள்ளிக்கிழமை சஞ்சய் காந்தி மருத்துவமனை அருகே காத்திருந்தபோது போலீஸாா் அவரை மடக்கிப் பிடித்தனா்.

விசாரணையில் கரோனா பொது முடக்கத்தால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் விரக்தி அடைந்ததால், எளிதில் பணம் பறிக்கும் இந்த சதித் திட்டத்தை போட்டதாகக் கூறினாா் தருண். இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா். அவருடன் சோ்ந்து நாடகமாடிய பெண்ணைத் தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞா் மீது தாக்குதல்: 5 போ் கைது

வேளாண்மைக் கல்லூரி மாணவிகளுக்கு களப்பயிற்சி

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

சாலை விரிவாக்கப் பணியால் மயான பாதையின்றி 5 கி.மீ சுற்றிச் செல்லும் அவலம்

பாம்பு புற்றை இடித்ததாக பாதிரியாா் கைது

SCROLL FOR NEXT