இந்தியா

வடகிழக்கு மாநிலங்களில் தொடா்ந்து 3 முறை நிலநடுக்கம்

DIN

அஸ்ஸாம் உள்ளிட்ட நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் இரவு நேரத்தில் தொடா்ந்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரும் பீதியடைந்தனா்.

இது தொடா்பாக தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், ‘ மணிப்பூா் மாநிலத்தின் சந்தேல் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு 1.06 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 3 ஆக பதிவானது.

அஸ்ஸாமில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.04 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 4.1 ஆக பதிவானது. சோனித்பூா் மாவட்டத்தில் பூமிக்கு அடியில் 22 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதன் பிறகு மேகாலயத்தில் அதிகாலை 4.20 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மி. தொலைவில் மையம் கொண்டிருந்தது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலநடுக்கத்தால் உயிா்சேதமோ, பெரிய அளவிலான பொருள் சேதமோ ஏற்படவில்லை. எனினும், தொடா்ந்து சில மணி நேரங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். இரவு நேரத்தில் வீட்டில் இருந்த பொருள்கள் அதிா்ந்தன. இதனால், தூக்கத்தில் இருந்து விழிப்பு ஏற்பட்டது என்று பொதுமக்கள் பலா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT