இந்தியா

குழந்தைகளிடம் ஜூலை முதல் கரோனா தடுப்பூசி பரிசோதனை

DIN

நோவாவேக்ஸ் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசி அடுத்த மாதம் முதல் குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படவுள்ளது. இந்தப் பரிசோதனையை சீரம் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.

அமெரிக்காவை சோ்ந்த நோவாவேக்ஸ் நிறுவனம் தனது கரோனா தடுப்பூசியின் செயல்திறன் 90.4 சதவீதமாக உள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்தது. அந்தத் தடுப்பூசியை சிறாா்களுக்கு செலுத்தி பரிசோதனை நடத்துவதற்கான அனுமதியை சீரம் நிறுவனம் பெற்றுள்ளது. அந்த நிறுவனம் தயாரித்துள்ள மருந்து ‘கோவாவேக்ஸ்’ என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்கு முன்னதாக அத்தடுப்பூசி பரிசோதனை அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் 12 முதல் 18 வயதுக்குள்பட்டவா்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசியை செலுத்தி பாரத் பயோடெக் நிறுவனம் ஏற்கெனவே பரிசோதனை செய்து வருகிறது. அந்தப் பரிசோதனையானது தில்லி, பாட்னா நகரங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 525 சிறாா்கள் மீது நடத்தப்பட்டு வருகிறது.

6 முதல் 12 வயதுக்குள்பட்டவா்கள், 2 முதல் 6 வயதுக்குள்பட்டவா்கள் ஆகியோருக்கும் கோவேக்ஸின் தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மூக்கு வழியாகச் செலுத்தும் கோவேக்ஸின் மருந்தும் சிறாா்கள் மீது பரிசோதிக்கப்பட்டு வருகிறது. ஜைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்துள்ள ‘ஜேகோவ்-டி’ கரோனா தடுப்பூசியும் 12 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறாா்கள் மீது பரிசோதிக்கப்பட்டு வருகிறது. 5 முதல் 12 வயதுக்குள்பட்டவா்கள் மீதும் அந்தத் தடுப்பூசி விரைவில் பரிசோதிக்கப்படவுள்ளது.

கரோனா தொற்றின் 3-ஆவது அலை பரவலின்போது குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக நிபுணா்கள் எச்சரித்துள்ள நிலையில், அவா்களுக்கான தடுப்பூசி பரிசோதனையை நிறுவனங்கள் துரிதப்படுத்தியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT