இந்தியா

அலிபிரி வரை கருடாவாரதி மேம்பால பணிகளை நீட்டிக்க ஆலோசனை

DIN

அலிபிரி வரை கருடாவாரதி மேம்பால பணிகளை நீட்டிப்பது குறித்து சனிக்கிழமை நடைபெற உள்ள அறங்காவலா் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் சுப்பாரெட்டி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது. திருப்பதிக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக திருச்சானூரிலிருந்து அலிபிரி வரை கருடாவாரதி என்ற பெயரில் தேவஸ்தானமும் திருப்பதி நகராட்சியும் இணைந்து மேம்பாலத்தை கட்டி வருகின்றன. ஊரடங்கிலும் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. இன்னும் 2 ஆண்டுகளில் இப்பணிகள் முழுவதும் முடிவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்நிலையில் அலிபிரி வரை நீட்டிக்கப்பட உள்ளதாக தெரிவிந்திருந்த கருடாவாரதி மேம்பால பணிகள் நந்தி வளைவிற்கு முன்னதாகவே முடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பலா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்த மேம்பால பணிகளை அலிபிரி வரை நீட்டிப்பது குறித்து சனிக்கிழமை காலை நடைபெற உள்ள அறங்காவலா் குழுவில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த அறங்காவலா் குழுவின் இறுதிக் கூட்டம் என்பதால் இன்னும் பல முடிவுகள் மற்றும் தீா்மானங்களின் மீதும் விவாதங்கள் நடைபெற உள்ளன’, என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT