இந்தியா

தில்லியில் 18-44 வயதினருக்கு 2.95 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன: ஆம் ஆத்மி எம்எல்ஏ

19th Jun 2021 07:34 PM

ADVERTISEMENT


தில்லியில் 18-44 வயதினருக்கு 2.95 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அடிஷி சனிக்கிழமை தெரிவித்தார்.

இதுபற்றி அவர் தெரிவித்தது:

"தில்லிக்கு 18-44 வயதினருக்கு 1.67 லட்சம் தடுப்பூசிகள் வெள்ளிக்கிழமை வந்தடைந்தன. தற்போது கையிருப்பில் இருக்கும் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் முறையே 14 மற்றும் 2 நாள்களுக்கு கையிருப்பில் உள்ளன. எனவே கோவின் செயலி மூலம் இன்னும் நிறைய இளைஞர்கள் பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 8.50 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. அதில் 7.65 லட்சம் தடுப்பூசிகள் கோவிஷீல்ட். 80,000 தடுப்பூசிகள் கோவேக்சின். கோவேக்சின் தடுப்பூசி 6 நாள்களுக்கு நீடிக்கும் அளவுக்கு கையிருப்பில் உள்ளன. கோவிஷீல்ட் 58 நாள்களுக்குத் தேவையான அளவு கையிருப்பில் உள்ளன."

ADVERTISEMENT

தில்லியில் 18-44 வயதினருக்கு 2.58 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளும், 37 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகளும் கையிருப்பில் உள்ளன.

Tags : Corona vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT