இந்தியா

கேரளத்தில் புதிதாக 12,443 பேருக்கு கரோனா

DIN


கேரளத்தில் புதிதாக 12,443 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர், பலியானோர் பற்றிய தரவுகளை முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

"மாநிலத்தில் புதிதாக 12,443 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,12,743 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 10.22 சதவிகிதம். இதுவரை மொத்தம் 2,18,53,900 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

கடந்த நாள்களில் 115 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11,948 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 78 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். 11,639 பேர் தொடர்பிலிருந்ததன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 653 பேருக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. 

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 13,145 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 26,78,499 பேர் குணமடைந்துள்ளனர். 1,06,861 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகை திருட்டு புகாா்: திரைப்படத் தயாரிப்பாளா் வீட்டு பணிப் பெண் தற்கொலை முயற்சி

ஐஏஎஸ் தோ்வுக்குப் பயிற்சி: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்

890 கூடுதல் சிறப்பு பேருந்துகள்

கோவை - தன்பாத் இடையே இன்று முதல் சிறப்பு ரயில்

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன நாள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT