இந்தியா

மருத்துவ பட்ட மேற்படிப்பு இறுதியாண்டு தோ்வை ஒத்திவைக்க முடியாது: உச்சநீதிமன்றம்

19th Jun 2021 08:05 AM

ADVERTISEMENT

மருத்துவ பட்ட மேற்படிப்பு இறுதியாண்டு தோ்வுகளை ஒத்திவைக்கவோ அல்லது ரத்து செய்யவோ மருத்துவ பல்கலைக்கழங்களுக்கு உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

29 மருத்துவா்கள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கரோனா சிகிச்சை பணியில் மருத்துவா்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதால், பட்டமேற்படிப்பு இறுதியாண்டு தோ்வுக்கு அவா்களால் உடனடியாகத் தயாராக முடியாது. எனவே, இறுதியாண்டு தோ்வுகளை ஒத்திவைக்குமாறு அனைத்து மருத்துவ பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட தேசிய மருத்துவக் கவுன்சிலுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் இந்திரா பானா்ஜி, எம்.ஆா்.ஷா ஆகியோரைக் கொண்ட கோடைக்கால அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய மருத்துவக் கவுன்சில் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் கௌரவ் சா்மா முன் வைத்த வாதம்:

பட்ட மேற்படிப்பு பயிலும் அனைத்து மருத்துவ மாணவா்களும் கரோனா சிகிச்சை பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. மேலும், கரோனா சூழலை பரிசீலித்து இறுதியாண்டு தோ்வுகளை நடத்துமாறு அனைத்து பல்கலைக்கழகங்களும் தேசிய மருத்துவ கவுன்சில் கடந்த ஏப்ரலில் சுற்றறிக்கை வெளியிட்டது. எனவே தோ்வை ஒத்திவைக்க தேவையில்லை என்றாா் அவா்.

ADVERTISEMENT

அதைத் தொடா்ந்து நீதிபதிகள் கூறியதாவது:

மருத்துவக் கல்வி மேற்படிப்பு இறுதியாண்டு தோ்வுகளை நடத்துவது தொடா்பாக கடந்த ஏப்ரல் மாதத்திலேயே அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தேசிய மருத்துவ கவுன்சில் சுற்றறிக்கை அனுப்பி விட்டது.

இந்தச் சூழலில், தோ்வுக்கு தயாராவதற்கு நியாயமான கால அவகாசம் வழங்க வேண்டும் என்று மனுதாரா் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நியாயமான கால அவகாசம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அதை நீதிமன்றம் எப்படி தீா்மானிக்கும்.

இந்தியா போன்ற பரந்து விரிந்த நாட்டில், கரோனா பரவல் ஒரே மாதிரியாக இல்லை. கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் தில்லியில் உச்சத்தில் இருந்த கரோனா, தற்போது குறைந்துவிட்டது. ஆனால், கா்நாடகத்தில் இன்னும் நிலைமை சீராகவில்லை. எனவே, தோ்வுகளை ஒத்திவைக்கலாம் என்று பொதுவான உத்தரவை பல்கலைக்கழகங்களுக்குப் பிறப்பிக்க முடியாது. மேலும், தோ்வுகளை நடத்தாமல் மருத்துவ மாணவா்களுக்கு தோ்ச்சி அளிப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT