இந்தியா

இலங்கையில் தடுப்பூசித் தட்டுப்பாடு: பள்ளிகள் திறப்பதில் சிக்கல்

DIN

கொழும்பு: இலங்கையில் கரோனா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதால், பள்ளிகளை மீண்டும் திறக்கும் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கரோனா 3-ஆவது அலை காரணமாக அந்த நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆசிரியா்கள், ஊழியா்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. எனினும், அதற்குத் தேவையான தடுப்பூசிகள் கிடைக்காததால் பள்ளிகளை மீண்டும் திறக்கும் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வியாழக்கிழமை நிலவரப்படி, இலங்கையில் 2,30,692 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் 2,374 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT