இந்தியா

தில்லியில் கலைஞர் அருங்காட்சியகம்

 நமது நிருபர்

புது தில்லி: தில்லியில் கட்டப்பட்டுவரும் திமுகவின் புதிய கட்சி அலுவலகத்தில் மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் அருங்காட்சியகம் அமைய இருக்கிறது. அந்த கட்டடத்துக்கு "கலைஞர் அறிவாலயம்' என பெயர்சூட்டப்படலாம் எனத் தெரியவந்துள்ளது. 
இந்த புதிய அலுவலகத்தை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த அலுவலகத்தை எளிய முறையில் கட்டும்படி 
உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தில்லியில் ஷீலா தீட்சித் முதல்வராக இருந்தபோது பண்டிட் தீனதயாள் உபாத்யாய மார்க்கில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கட்டடம் கட்ட இடம் அளிக்கப்பட்டது. இதில் பாஜக அலுவலகம் அருகே திமுகவுக்கும் இடம் ஒதுக்கப்பட்டது.
சுமார் 11,000 சதுர அடி கொண்ட இந்த இடத்தில் 10,000 சதுர அடியில் 4 மாடிக்கட்டடம் கட்டப்படுகிறது. கீழ் தளத்தில் சுமார் 2,800 சதுர அடியில் மறைந்த முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி அருங்காட்சியகம் அமைய இருக்கிறது. இதில் மறைந்த தலைவரின் மார்பளவு சிலையோடு, அவரது நினைவுகூரும் தகவல்கள், அவரது புத்தகங்கள் ஆகியவை காட்சிப்படுத்த இருக்கின்றன. 
இந்தக் கட்டடத்தின் முதல் தளத்தில் திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்க அலுவலகத்திற்கு  இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2-ஆவது மாடியில் திமுக கட்சி அலுவலகம் செயல்பட இருக்கிறது. இங்கு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், மற்ற அலுவலர்களின் அறைகள் ஆகிய வசதிகளுடன் கட்டப்படுகிறது. மூன்றாவது மாடியில் கலந்துரையாடல், போன்ற கூட்டங்களுக்கான அரங்கு ஒன்றும்  கட்டப்படுகிறது.
நான்காவது மாடியில் விருந்தினர் தங்கும் அறை அல்லது கட்சி தலைவரும் மற்றவர்களும் 
தில்லி வந்தால் அங்கு தங்குவதற்கு வசதியாக கட்டப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தக் கட்டடப் பணிகள் கரோனா  நோய்த்தொற்று காரணமாக முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டது. 
இந்த கட்டடத்தை பார்வையிட வந்த தமிழக முதல்வர் கட்டடப்பணிகளுக்கு இறுதி வடிவம் கொடுத்தார். அடிக்கடி சுவர் வண்ணம் அடிப்பதை தவிர்க்க திட்டப்படி பளிங்கு கற்களை பதிக்கப்பட  இருந்தது. 
ஆனால் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மறைந்த தலைவரின் நினைவுகளைப் போற்றும் வகையில் இருக்கும் இந்தக் கட்சிஅலுவலகம் அவரைப்போன்று எளிமையாக இருக்கவேண்டும் எனக் கூறி, அந்த பளிங்கு கற்கள் பதிப்பதை தவிர்க்க யோசனை கூறியுள்ளார். 
பெயர் உறுதிசெய்யப்படாத இந்த கலைஞர் அறிவாலயம்  இரண்டு மாதங்களில் திறக்கப்பட இருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கர்: 29 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தென் சென்னையில் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

SCROLL FOR NEXT