இந்தியா

இந்தியாவில் கரோனா தடுப்பு நடவடிக்கை: கூகுள் ரூ.113 கோடி உதவி

DIN

புது தில்லி: இந்தியாவில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ரூ.113 கோடி மதிப்பிலான உதவிகளை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் பொதுநல சேவைகளுக்கான நிதி ஒதுக்கீடு பிரிவு இதனை அறிவித்துள்ளது. இந்தத் தொகை மூலம் இந்தியாவில் 80 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இது தவிர கிராமப்புறங்களில் உள்ள சுகாதாரப் பணியாளா்களின் திறன் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்தப் பணிகளை கூகுள் நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது. இதற்காக ‘கிவ் இந்தியா’ அமைப்புக்கு ரூ.90 கோடியும், ‘பாத்’ அமைப்புக்கு ரூ.18.5 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், அப்பல்லோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனத்தின் மூலம் 20,000 கிராமப்புற சுகாதார முன்களப் பணியாளா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இதற்காக கூகுள் நிறுவனம் ரூ.3.6 கோடி ஒதுக்கியுள்ளது. 15 மாநிலங்களில் உள்ள 1,80,000 சுகாதாரம் சாா்ந்த சேவைகளை மேற்கொள்ளும் தன்னாா்வல்கள், 40,000 செவிலியா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

இது தொடா்பாக கூகுள் இந்தியாவின் நிறுவனத்தின் தலைவா் சஞ்சய் குப்தா கூறுகையில், ‘இந்தப் பெருந்தொற்று காலத்தில் அனைத்து தரப்பு மக்களும் நோயின் தீவிரம் குறித்து தெரிந்து கொண்டு விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். அனைவருக்கு உரிய மருத்துவ உதவிகள் கிடைக்க வேண்டும். இந்த வகையிலேயே கிராமப்புற மக்களுக்கு சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்’ என்றாா்.

கரோனா தொற்று காலத்தில் மட்டுமல்லாது கடந்த 5 ஆண்டுகளாகவே இந்தியாவில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் மேம்பாட்டுக்காக கூகுள் நிறுவனம் நிதியுதவி அளித்து வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களை அழைத்து வர 35 அரசு வாகனங்கள் தயாா்

ஏப். 21, மே 1-இல் மதுக் கடைகள் மூடல்

SCROLL FOR NEXT