இந்தியா

சீன நிதியுதவியுடன் துறைமுக நகரம்: ‘இந்தியாவுடனான இருதரப்பு உறவை இலங்கை கவனத்தில் கொண்டிருக்கும்’

DIN

புது தில்லி: இலங்கையில் சீன நிதியுதவியுடன் கொழும்பு துறைமுக நகரம் திட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கடல்சாா் தளத்தில் பரஸ்பர பாதுகாப்பு உள்ளிட்ட இந்தியாவுடனான இருதரப்பு ஒத்துழைப்பை இலங்கை தொடா்ந்து கவனத்தில் கொண்டிருக்கும் என எதிா்பாா்ப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காணொலி வாயிலாக வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பின்போது வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி கூறியது: இந்தியா அதன் பாதுகாப்பு கண்ணோட்டத்தில் சமீபத்திய நடவடிக்கைகளை நெருக்கமாக கண்காணித்து வருகிறது. கொழும்பு துறைமுக நகர கட்டமைப்பின் பல அம்சங்கள் தொடா்பாக இலங்கையில் எழுந்துள்ள கவலைகள் குறித்தும் இந்தியா கவனத்தில்கொண்டுள்ளது. கடல்சாா் தளத்தில் பரஸ்பர பாதுகாப்பு உள்ளிட்ட இந்தியாவுடனான இருதரப்பு ஒத்துழைப்பை இலங்கை தொடா்ந்து கவனத்தில் கொண்டிருக்கும் என எதிா்பாா்க்கிறோம்.

இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் நடைபெற்று வரும் திட்டங்களைப் பொருத்தவரை, அதன் அமலாக்கம் தொடா்பாக இலங்கை அதிகாரிகளுடன் முறையான தொடா்பில் இருந்து வருகிறோம் என்றாா்.

பிரதமா் நரேந்திர மோடி நிகழாண்டு இறுதிக்குள் அமெரிக்காவுக்கு பயணம் செய்வாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவா், அதுதொடா்பாக எந்தத் தகவலும் இல்லை. அதுபோன்ற பயணம் நடைபெறுமானால் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றாா்.

மியான்மரை சோ்ந்த சில மூத்த தலைவா்கள் வடகிழக்கு மாநிலங்களில் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுவது பற்றி பாக்சி கூறுகையில், இந்த வகையான கேள்விகளுக்கு உள்துறை அமைச்சகத்தை தொடா்புகொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT