இந்தியா

அசாம் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜிநாமா; பாஜகவில் இணைகிறாரா?

18th Jun 2021 12:51 PM

ADVERTISEMENT

அசாம் காங்கிரஸ் எம்எல்ஏ ருப்ஜோதி குர்மி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இவர் விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அசாம் மாநிலத்தில் நான்கு முறை எம்எல்ஏவான காங்கிரஸின் ருப்ஜோதி குர்மி கட்சியில் இருந்தும் எம்எல்ஏ பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது ராஜிநாமா கடிதத்தை அசாம் பேரவைத் தலைவர் பிஸ்வாஜித் டைமரியிடம் வழங்கினார்.

காங்கிரஸ் கட்சித் தலைமை இளம் தலைவர்களின் குரலைப் புறக்கணிப்பதால் தான் காங்கிரஸை விட்டு வெளியேறுவதாக ருப்ஜோதி தெரிவித்துள்ளார். மேலும், கட்சியின் நிலைமை அனைத்து மாநிலங்களிலும் மோசமடைந்து வருகிறது. ராகுல் காந்தி தலைமை சரியாக இல்லை. அவர் தலைவராக இருந்தால் கட்சி முன்னேறாது என்றும் கூறியுள்ளார். 

காங்கிரஸிலிருந்து விலகிய ருப்ஜோதி குர்மி, பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ADVERTISEMENT

Tags : Assam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT