இந்தியா

இந்தியாவில் கரோனா தினசரி பாதிப்பு  67,208-ஆக குறைவு: ஒரே நாளில் 2,330 பேர் பலி

DIN


புதுதில்லி: இந்தியாவில் கரோனா தொற்றினால் வியாழக்கிழமை காலை வரையிலான பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67,208 -ஆக குறைந்துள்ளது. தொடா்ந்து பத்தாவது நாளாக தினசரி புதிய பாதிப்புகள் ஒரு லட்சத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது தொடா்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 67,208 பேருக்கு மட்டுமே புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பத்து நாள்களாகவே, தினசரி புதிய பாதிப்புகள் ஒரு லட்சத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் ஒரே நாளில்  2,330 பேர் உயிரிழந்தனர். இதுவரை மொத்தம் 3,81,903 போ் உயிரிழந்துள்ளனர். 

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கைத் தொடா்ந்து கணிசமாக சரிந்து, தற்போது 8,26,740 -ஆக உள்ளது. 

தினசரி குணமடைபவா்கள் எண்ணிக்கை, கடந்த 34 நாள்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,03,570 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை மொத்தம் 2,84,91,670 போ் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். 

வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 19,31,249 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 38,52,38,220 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை தடுப்பூசி போடப்பட்டவா்களின் எண்ணிக்கை 26 கோடியே 55 லட்சத்து 19 ஆயிரத்து 251-ஐ கடந்தது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT