இந்தியா

ஜிஎஸ்டி நிலுவைத் தொகை எல்லா மாநிலங்களுக்கும் வழங்கப்படவில்லை

DIN


புது தில்லி: அனைத்து மாநிலங்களுக்கும் சரக்கு மற்றும் சேவை வரி நிலுவைத் தொகை வழங்கப்பட்டுவிட்டது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது தவறு என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு முறையை அமல்படுத்தும் நோக்கத்தில் 2017-ஆம் ஆண்டின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. இந்த வரிவிதிப்பு முறையால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில், மத்திய அரசிடமிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு இழப்பீடு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு முறையாக வழங்குவதில்லை என்றும், பல ஆயிரம் கோடி இழப்பீடு நிலுவையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்த நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை வழங்கப்பட்டுவிட்டது என்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் அளித்த பேட்டியை சுட்டிக்காட்டி ப.சிதம்பரம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜிஎஸ்டி நிலுவைத் தொகை குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, அனைத்து மாநிலங்களுக்கும் நிலுவைத் தொகை விடுவிக்கப்பட்டுவிட்டது என்று நிதியமைச்சர் பதிலளித்தார். ஆனால், நிதியமைச்சர் கூறியது தவறு. ஏனெனில் காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் ஜிஎஸ்டி நிலுவை குறித்த புள்ளிவிவரங்களை சேகரித்திருக்கிறேன். பஞ்சாப் மாநிலத்துக்கு ஜூன் 1-ஆம் தேதி நிலவரப்படி ரூ. 7,393 கோடியும், சத்தீஸ்கருக்கு ரூ. 3,069 கோடியும் ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவை அளிக்கப்பட வேண்டியுள்ளது. அதுபோல, ராஜஸ்தான் மாநிலத்துக்கு மே 21-ஆம் தேதி நிலவரப்படி ரூ. 7,142 கோடி நிலுவை உள்ளது.
பிற மாநிலங்களுக்கான நிலுவை விவரங்களை சேகரிப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறேன். எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு இதற்கு முன்பும் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை வழங்குவதில் மத்திய அரசு தாமதம் செய்துள்ளது. இப்போது, கரோனா பாதிப்பினால் ஏற்பட்டிருக்கும் கூடுதல் செலவுகளை மாநிலங்கள் சமாளிக்க உதவியாக, ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மாநிலங்களுக்கு விரைந்து அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT