இந்தியா

கரோனா 3-ம் அலைக்குத் தயாராகும் தில்லி: 5 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி

PTI


புது தில்லி: கரோனா மூன்றாம் அலையை சமாளிக்க ஏதுவாக ஐந்தாயிரம் இளைஞர்களுக்கு மருத்துவ உதவியாளர்களுக்கான பயிற்சியை அளிக்கவிருப்பதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

நாட்டில் கரோனா மூன்றாம் அலை தாக்கும் அபாயம் இருப்பதாக ஏற்கனவே நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், அதனை சமாளிக்க வசதியாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உதவும் வகையில், சுமார் 5 ஆயிரம் இளைஞர்களுக்கு மருத்துவ உதவியாளர்களுக்கான பயிற்சியை அளிக்க முடிவு செய்திருப்பதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

ஜூன் 28-ஆம் தேதி முதல் இந்த பயிற்சி தொடங்கவிருப்பதாகவும், முதல் கட்டமாக 500 இளைஞர்களுக்க இரண்டு வாரங்கள் செவிலியர் பணி மற்றும் உயிர்காக்கும் பயிற்சிகள் அளிக்கப்படவிருப்பதாகக் கூறியுள்ளார்.

இந்தப் பயிற்சியை மேற்கொள்ளும் இளைஞர்கள் பனிரெண்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும், 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி நாள்களுக்கு ஏற்ப அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். ஜூன் 17 முதல் இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT