இந்தியா

கரோனாவை வெற்றி கண்ட தாராவி: 2வது நாளாக புதிய பாதிப்பில்லை

ANI

புது தில்லி: கரோனா இரண்டாவது அலைகளுக்கு இடையே, ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியிலிருந்து ஒரு நல்ல செய்தி கிடைக்கப் பெற்றுள்ளது.

அதாவது, மும்பையில் உள்ள மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில், இரண்டாவது நாளாக புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.

இது குறித்து மும்பை மாநகராட்சி தகவல் வெளியிட்டுளள்து. அதில், மும்பையின் தாராவி பகுதியில் இன்று இரண்டாவது நாளாக புதிதாக யாருக்கும் கரோனா பாதிக்கப்படவில்லை. அதேவேளையில், கரோனா பாதித்து சிகிச்சையிலிருப்போரின் எண்ணிக்கையும் 11 ஆகக் குறைந்துள்ளது. இதுவரை தாராவியில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,861 ஆக உள்ளது.

கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதிக்குப் பிறகு தாராவில் திங்களன்று முதல் முறையாக கரோனா பாதிப்பு பதிவாகாத நிலையில், செவ்வாயன்றும் அதே நிலை நீடித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

SCROLL FOR NEXT