இந்தியா

ஹரியாணாவில் ஜூன் 30 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு

PTI

கரோனா தொற்று பரவல் காரணமாக ஹரியாணா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த கோடை விடுமுறை ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

இந்நிலையில் ஹரியாணாவில் நிலவி வரும் கரோனா பரவல் சூழல் காரணமாக மாணவர்களுக்கான கோடை விடுமுறை ஜூன் 30ஆம் தேதி நீட்டிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

வழக்கமாக, பள்ளிகள் கோடைக்கால விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படும் நிலையில், ஏற்கனவே ஜூன் 15 வரை கோடைக்கால விடுமுறை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT