இந்தியா

முதியவர் தாக்கப்பட்ட விவகாரம்: டிவிட்டர் நிறுவனத்திற்கு எதிராக உ.பி. காவல்துறை வழக்குப்பதிவு

DIN

உத்தரப்பிரதேசத்தில் முதியவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் தவறானப் தகவலை பரப்பியதாக சுட்டுரை நிறுவனம் உள்ளிட்ட 9 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் இஸ்லாமிய முதியவர் ஒருவரை ஜெய்ஸ்ரீ ராம் கூறுமாறு கட்டாயப்படுத்தி இளைஞர்கள் தாக்குவதாக விடியோ சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வந்தது. 

இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள உத்தரப் பிரதேச காவல்துறை இந்த சம்பவம் தொடர்பாக தவறான தகவல் பகிரப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட முதியவர் மாந்திரீகம் செய்து வருவதாகவும், அவர் அளித்த தாயத்தால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரவில்லை என்பதால் முதியவர் தாக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவம் மத அடிப்படையில் நடக்கவில்லை என்பதால் இதுகுறித்து தவறான தகவலைப் பகிர்ந்ததாக சுட்டுரை நிறுவனம் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT