இந்தியா

மாநிலங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட 27.28 கோடி கரோனா தடுப்பூசிகள்: மத்திய அரசு

DIN


புது தில்லி:  மத்திய அரசு இதுவரை, 27.28 கோடிக்கும் அதிகமான (27,28,31,900) கரோனா தடுப்பூசி மருந்துகளை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசு தெரிவித்திருப்பதாவது, தற்போது, 1.82 கோடிக்கும் அதிகமான (1,82,86,208) கரோனா தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன.

இன்று காலை 8 மணி வரையிலான புள்ளி விவரங்களின் அடிப்படையில், மொத்தம் 25,45,45,692 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன. தாராளமயமாக்கப்பட்ட விலை நிர்ணயம் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட மூன்றாம் கட்ட கரோனா தடுப்பூசி திட்டம், மே 1 முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் மத்திய மருந்துகள் ஆய்வகம் அனுமதி அளித்த மொத்த தடுப்பூசிகளில் 50 சதவீதத்தை மத்திய அரசு கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT