இந்தியா

45-60 வயதுக்குட்பட்டோருக்கு அதிகபட்சமாக 40% தடுப்பூசி: சுகாதாரத் துறை

DIN

நாட்டில் 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக 40 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

அதற்கு அடுத்தபடியாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 30.7 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருவதால், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 

தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள மாநிலங்களில் மத்திய சுகாதாரத் துறை போதிய தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்து வருகிறது. 

மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும், அதிகபட்சமாக 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் அடுத்தடுத்தக் கட்டமாக வயதுவரியாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஜனவரி முதல் இன்று வரை 151-வது நாளாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதில் அதிகபட்சமாக 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு 40 சதவிகிதமும், அதற்கு அடுத்தபடியாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 30.7 சதவிகிதமும், அதனைத் தொடர்ந்து 29.3 சதவிகிதமும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1.40 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காா்த்தி சிதம்பரத்தின் கடவுச்சீட்டை 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க உத்தரவு

திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் நாளை பிரசாரம்

வி.வி. பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்

கட்டாரிமங்கலம் கோயிலில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை

மெட்ரோ பணி: நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

SCROLL FOR NEXT