இந்தியா

கேரளத்தில் புதிதாக 12,246 பேருக்கு கரோனா

15th Jun 2021 08:33 PM

ADVERTISEMENT


கேரளத்தில் புதிதாக 12,246 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,48,204 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கைகளைவிட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகியுள்ளது. 13,536 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 26,23,904 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த நாள்களில் 166 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 11,508 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக எர்ணாகுளத்தில் 1,702 பேரும், கொல்லத்திலும் 1,597 பேரும், திருவனந்தபுரத்தில் 1,567 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,04,120 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 11.76 சதவிகிதம். தற்போதைய நிலையில் அங்கு 1,12,361 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT