இந்தியா

கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோய் பேரிடராக அறிவித்தது ஜார்கண்ட்

15th Jun 2021 08:25 PM

ADVERTISEMENT

கருப்புப் பூஞ்சை நோயை தொற்று நோயாக ஜார்கண்ட் அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

‘மியூகோர்மைகோசிஸ்’ என்னும் கருப்புப் பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சையாகும். இந்த பூஞ்சை தாக்குவதால் தலைவலி, காய்ச்சல், கண்களில் வலி, மூக்கடைப்பு, பாா்வைக் குறைபாடு போன்ற அறிகுறிகள் உண்டாகிறது. இந்த பூஞ்சை பெரும்பாலும் கரோனாவில் இருந்து மீண்டவா்களையே தாக்கி வருகிறது. 

கருப்புப் பூஞ்சையால் உயிரிழப்புகள் நேரிடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், தெலங்கானா, கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த நோய் பரவி வருகிறது. நாட்டில் இதுவரை 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கருப்புப் பூஞ்சை நோயைப் பரவும் நோயாக ஜார்கண்ட் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக ராஜஸ்தான், தெலங்கானா, தில்லி அரசுகள் கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags : Jharkhand black fungus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT