இந்தியா

அனைவரும் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்: ராகுல்

15th Jun 2021 01:05 PM

ADVERTISEMENT

நாட்டு மக்கள் அனைவரும் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.  

இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, கரோனா பொதுமுடக்கத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. எனினும் கரோனா முழுவதுமாக விலகிவிடவில்லை.

படிக்க: 'தடுப்பூசி அவசியம்': அசாமில் தனியொருவனாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் 'தடுப்பூசி மனிதன்'

இதுபோன்ற அச்சுறுத்தலான சூழலில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். கூடிய விரைவில் அனைவரும் தவறாது தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT