இந்தியா

ஆந்திரத்தில் அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை: இதுவரை 2,303 பேர் பாதிப்பு

15th Jun 2021 12:35 PM

ADVERTISEMENT

ஆந்திரத்தில் இதுவரை 2,303 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 157 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் அனில் குமார் சிங்கால் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆந்திரத்தில் 2,303 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 1,328 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 157 பேர் கருப்பு பூஞ்சையால் இறந்துள்ளனர். மாநிலம் முழுவதும் ஆம்போடெரிசின் ஊசி மற்றும் போசகோனசோல் மாத்திரைகள் போதுமான அளவில் கிடைக்கின்றன என்றார். 

தொடர்ந்து, கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் குடும்பங்களுக்கு முறையே தலா ரூ.25 லட்சம், ரூ.20 லட்சம் என மாநில அரசு அறிவித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், மாநிலத்தில் கரோனா பாதிப்பு கணிசமாகக் குறைந்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில், கரோனா நோயாளிகளுக்கு டெலிமெடிசின் கால் சென்டர் மூலம் நிபுணர் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT