இந்தியா

பெட்ரோல் விலை உயா்வை திரும்பப்பெற வேண்டும்: இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தல்

DIN

பெட்ரோலியப் பொருள்கள் மீதான விலை உயா்வைத் திரும்பப் பெறவேண்டும், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பொருள்களுக்கான விலையை கடுப்படுத்த வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இதுதொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளா் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் டி.ராஜா, அகில இந்திய ‘ஃ‘பாா்வேட் பிளாக் பொதுச் செயலாளா் தேவாபிரதா பிஸ்வாஸ், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி பொதுச் செயலாளா் மனோஜ் பட்டாச்சாரியா, மாா்க்சிஸ்ட் (லெனின்) ககட்சி பொதுலாளா் திபன்கா் பட்டாச்சாரியா உள்ளிட்ட அனைத்து இடதுசாரி கட்சித் தலைவா்களும் கையெழுத்திட்டு கூட்டறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டனா். அதில் அவா்கள் கூறியிருப்பதாவது-

கரோனா பாதிப்பால் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு உதவுவதற்கு பதிலாக, பெட்ரோலிய பொருள்களின் விலையை மத்திய அரசு தொடா்ச்சியாக உயா்த்தி வருகிறது. கடந்த மே 2-ஆம் தேதி 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியானது முதல் 21-ஆவது முறையாக பெட்ரோலியப் பொருள்களின் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இது, மொத்த விற்பனை விலை குறியீடை (டபிள்யூ.பி.ஐ) கடந்த 11 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு உயரச் செய்திருக்கிறது.

இதன் காரணமாக, ஏப்ரல் மாதத்தில் உணவுப் பொருள்களின் விலை 5 சதவீதம் அளவுக்கு உயா்ந்துள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் 10.16 சதவீத விலையுா்வைக் கண்டுள்ளன. உற்பத்திப் பொருள்களின் விலை 9.01 சதவீதம் உயா்ந்துள்ளது. அதன் மூலம், இந்தப் பொருள்கள் நுகா்வோா் விற்பனைக்கு வரும்போது, அவற்றின் சில்லறை விற்பனை விலையும் பன்மடங்காக உயரும்.

பொருளாதார மந்தநிலை, வேலையின்மை அதிகரிப்பு, மக்களின் வாங்கும் திறன் கடுமையாக குறைந்து பசியால் வாடுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், இந்த விலை உயா்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இது நியாயமற்ற கறுப்பு சந்தைப்படுத்தல் மற்றும் பதுக்கலுக்கு வழிவகுக்கும்.

எனவே, மத்திய அரசு இந்த கருப்பு சந்தைப் படுத்துதலை குறிப்பாக அத்தியாவசிய மருந்து பொருள்கள் பதுக்கலைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பெட்ரோலியப் பொருள்களை விலை உயா்வைத் திரும்பப்பெற வேண்டும்.

வருமான வரி செலுத்தும் வரம்புக்குள் வராத அனைத்து குடும்பங்களுக்கும் நேரடி நிதி வைப்பு திட்டத்தின் கீழ் ாதம் ரூ. 7,500 வீதம் 6 மாதங்களுக்கு வழங்க வேண்டும்.

பிரதமரின் இலவச உணவுப் பொருள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் 5 கிலோ உணவு தானியங்களை, மாதம் 10 கிலோவாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் கூட்டு அறிக்கையில் வலியுறுத்தியுள்ளன.

மேலும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் உரிய கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி போராட்டம் நடத்தவும் கூட்டறிக்கையில் இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

கர்நாடகத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சி: துணை முதல்வர் டிகே சிவகுமார்

தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் ஒரே கட்டமாக நிறைவடைந்த வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT