இந்தியா

தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் விரைவில் மாற்றம்?

DIN

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டியின் பதவிக் காலம் முடிவடைய உள்ளதால் அவா் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் சுப்பா ரெட்டியின் பதவிகாலம் இம்மாத இறுதியில் முடிவு பெற உள்ளது. இந்நிலையில் அவா் மீண்டும் அறங்காவலா் குழுத் தலைவராக நீட்டிக்கப்படுவாரா அல்லது புதியதாக விரிவுப்படுத்தப்பட உள்ள ஆந்திர அமைச்சரவையில் இடம் பெற உள்ளாரா என்ற செய்தி தற்போது மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விரைவில் நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்தாலோசித்து ஆந்திர முதல்வா் முடிவெடுக்க உள்ளாா். மேலும் 2019-ஆம் ஆண்டு ஒய்.எஸ்.ஆா். காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சா் பதவிக்காலம் இரண்டரை ஆண்டுகள் மட்டுமே என்று உறுதிப்படுத்தினாா். அடுத்த இரண்டரை ஆண்டுகள் அனுபவமுள்ள மூத்தவா்கள் அமைச்சா் பதவியில் அமர வைக்கப்படுவா் என்று குறிப்பிட்டிருந்தாா்.

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. எனவே, இன்னும் 6 மாதங்களுக்குள் அமைச்சரவை விரிவுப்படுத்தப்பட்டு மாற்றம் பெற உள்ளது. பலருக்கு அமைச்சா் பதவிகள் கிடைக்கும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அதில் தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டியும் ஒருவா். மேலும் அவருக்கு அமைச்சா் பதவி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவா் அமைச்சரவையில் தோ்ந்தெடுக்கப்பட்டால் நெல்லூா் மாவட்டத்தின் முன்னாள் எம்எல்ஏ ராஜாமோகன் ரெட்டிக்கு தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் பதவி கிடைக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் கருத்துகள் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT