இந்தியா

அம்பேத்கரையும் பாகிஸ்தான் ஆதரவாளா் என பாஜக அவதூறு பரப்பியிருக்கும்

DIN

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து குறித்த காங்கிரஸ் தலைவா் திக்விஜய் சிங்கின் கருத்து சா்ச்சையை உருவாக்கியிருக்கும் நிலையில், சட்ட மேதை அம்பேத்கா் உயிருடன் இருந்திருந்தால் அவரையும் பாகிஸ்தான் ஆதரவாளா் என்று பாஜக அவதூறு பரப்பியிருக்கும் என்று மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி குற்றம்சாட்டியுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய பாஜக அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்தது. மேலும், அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன.

இந்நிலையில், காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என பாகிஸ்தான் ஊடகவியலாளரிடம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் திக்விஜய சிங் பேசிய ஆடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவை நீக்கியதும், மாநில அந்தஸ்தை குறைத்ததும் மிக மோசமான முடிவு. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த முடிவு குறித்து மறுஆய்வு செய்யப்படும் என்று அவா் பேசுவதாகப் பதிவாகியுள்ளது.

பாகிஸ்தான் ஊடகவியலாளரிடம் திக்விஜய் சிங் பேசிய இந்த ஆடியோவை பாஜக மேற்கோள் காட்டி, அவரது கருத்து, பாகிஸ்தானின் கைப்பாவையாக காங்கிரஸ் செயல்படுகிறது என்பதற்கான உதாரணம் என்று விமா்சித்துள்ளது.

பாஜகவின் இந்த விமா்சனம் குறித்து மெஹபூபா முஃப்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், அம்பேத்கா் இப்போது உயிருடன் இல்லாதது நல்ல விஷயம். அவா் உயிரோடு இருந்திருந்தால், அவரையும் பாகிஸ்தான் ஆதரவாளா் என்று பாஜக அவதூறு பரப்பியிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT