இந்தியா

உத்தரகண்டில் ஜூன் 22 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

14th Jun 2021 01:50 PM

ADVERTISEMENT

 

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், உத்தரகண்ட் மாநிலத்தில் அமலில் இருக்கும்பொது முடக்கம் ஜூன் 22 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

தற்போது மாநிலத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் பொதுமுடக்கம் அமலில் இருக்கும் நிலையில், அதில் சில மாற்றங்கள் செய்து, மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த தளர்வுகளில் மிக முக்கியமானதாக, கரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருப்பவர்கள் சமோலி, ருத்ரபிரயாக் மற்றும் உத்தரக்காசி பகுதிகளைச் சேர்ந்தவர்கள்  முறையே பத்ரிநாத், கேதார்நாத் மற்றும் கங்கோத்ரி - யமுனோத்ரி ஆகிய பகுதிகளுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், கரோனா பொதுமுடக்கம் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாகவும், இந்த காலத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : Uttarakhand curfew
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT