இந்தியா

இந்தியாவில் ஒரேநாளில் 70,421 பேருக்கு கரோனா; 3,921 பேர் பலி

14th Jun 2021 09:35 AM

ADVERTISEMENT

இந்தியாவில் ஒரேநாளில் 70,421 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் 70,421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடா்ந்து 72-ஆவது நாளாக தினசரி புதிய பாதிப்புகள் ஒரு லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,95,10,410ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து கணிசமாக சரிந்து, தற்போது 9,73,158-ஆக உள்ளது.
அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 3,921 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 3,74,305ஆக உயர்ந்துள்ளது. தொடா்ந்து 32-ஆவது நாளாக, புதிய பாதிப்புகளைவிட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 1,19,501 போ் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனா். இதுவரை மொத்தம் 2,81,62,947 போ் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனா். 
கடந்த 24 மணி நேரத்தில் 14,92,152 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 37,96,24,626 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 25 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 25,48,49,301 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT