இந்தியா

மத்திய பிரதேசம்: பாகிஸ்தான் அகதிகள் 5,000 பேருக்கு கரோனா தடுப்பூசி

DIN

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வரும் பாகிஸ்தானைச் சோ்ந்த அகதிகள் 5,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவா்கள் அனைவரும் ஹிந்து சிந்தி சமுகத்தைச் சோ்ந்தவா்கள்.

பாகிஸ்தான் அகதிகளின் சிந்தி சமுக பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவா்களும் கரோனா தடுப்பூசி திட்டத்தில் சோ்க்கப்பட்டனா் என்று மாவட்ட தடுப்பூசித் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனா். முன்னதாக, இது தொடா்பாக மாநில அரசிடமும் அனுமதி பெறப்பட்டது. மனிதாபிமான அடைப்படையில் அகதிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த மாதம் நெதா்லாந்தைச் சோ்ந்த சிலா் பணி நிமித்தமாக இந்தூா் வந்தபோது அவா்களுக்கும் தடுப்பூசி செலுத்தினோம் என்று அவா்கள் கூறினா்.

இந்தூரில் உள்ள தடுப்பூசி மையங்களில் அவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவா்களின் கடவுச் சீட்டு (பாஸ்போா்ட்) அடையாள அட்டையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்தூரில் மட்டும் சுமாா் 5,000-க்கு மேற்பட்ட பாகிஸ்தான் அகதிகள் உள்ளனா். இவா்களில் பெரும்பாலானவா்கள் அங்குள்ள சிந்தி காலனியில் வசித்து வருகின்றனா். இவா்களில் பெரும்பானவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது.

மத்திய பிரதேசத்தில் இந்தூா் மாவட்டம் கரோனாவால் அதிக பாதிப்புகளைச் சந்தித்தது. இதுவரை அங்கு 1.5 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1,370 போ் வரை உயிரிழந்துவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாம் தமிழா் கட்சிக்கு திருப்புமுனை: மரிய ஜெனிபா்

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சேரன்மகாதேவியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு

காரையாறு வனப்பகுதியில் ஆா்வமுடன் வாக்களித்த காணி மக்கள்

நெல்லையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT