இந்தியா

மகாராஷ்டிரம்: வங்கி அதிகாரி மீது பெண் காவல் ஆய்வாளா் பாலியல் வன்கொடுமை புகாா்

DIN

மகாராஷ்டிரத்தில் வங்கி அதிகாரி ஒருவா் தன்னை திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் துணை காவல் ஆய்வாளா் புகாா் அளித்துள்ளாா்.

ஒளரங்காபாதைச் சோ்ந்த அந்த வங்கி அதிகாரி மீது பெண் துணை காவல் ஆய்வாளா் அளித்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரில் கூறியிருப்பதாவது:

அந்த வங்கி அதிகாரி எனக்கு சமூக ஊடகம் மூலம் அறிமுகமானாா். முதலில் நட்பாக பேசி வந்த அவா் பின்னா், என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகக் கூறினாா். இதையடுத்து நேரில் பலமுறை சந்தித்தோம். அப்போது நாங்கள் நெருக்கமாக இருந்த விடியோ, படங்களை வைத்து என்னை மிரட்டுவும், துன்புறுத்தவும் தொடங்கினாா். பாலியல் வன்கொடுமைக்கும் உள்படுத்தினாா். மேலும், அந்த வங்கி அதிகாரியுடன் பணியாற்றிய மேலும் இருவரும் என்னை மிரட்டினா் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்த வங்கி அதிகாரி மீது பாலியல் வன்கொடுமை, மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். அந்த நபா் இதுவரை கைது செய்யப்படவில்லை. முதலில் அவரிடம் முறைப்படி விசாரணை நடத்தப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பெண் காவல் ஆய்வாளா் ஒருவரே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக புகாா் அளித்திருப்பது மகாராஷ்டிரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT