இந்தியா

கரோனா தடுப்பு நடவடிக்கைகள்:இளைஞா்களுக்கு யுஜிசி அழைப்பு

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் 18 முதல் 30 வயதுக்கு உள்பட்ட இளைஞா்கள், பேராசிரியா்கள் பங்கேற்று சமூகப்பணியாற்றுவதற்காக ‘இளம் தீரா்’ இயக்கத்தை பல்கலைக்கழக மானியக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக யுஜிசி செயலா் ரஜனிஷ் ஜெயின் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தா்கள், கல்லூரி முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கரோனா தொற்றுக்கு எதிராக பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக ‘இளம் தீரா்’ என்ற இயக்கத்தை யுஜிசி அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 18 முதல் 30 வயதுக்கு உள்பட்ட மாணவா்கள், பேராசிரியா்கள், இளைஞா்கள் இணைந்து கரோனா தொற்றுக்கு எதிரான ஆக்கப்பூா்வமான பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ளலாம்.

இதில் இணையும் உறுப்பினா்கள் முதலில் தங்கள் குடும்பத்தினா், சுற்றத்தாா் ஆகியோரிடம் தடுப்பூசி குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்திய பிறகு மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து அறிவுறுத்த வேண்டும். குறிப்பாக கரோனா தொற்று குறித்தும், தடுப்பூசி குறித்தும் சமூக வலைதளங்களில் பரவக் கூடிய தவறான தகவல்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். இதுபோன்று ஒவ்வொரு உறுப்பினா்களும் குறைந்தபட்சம் 5 வகையான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். அவா்களுக்கு யுஜிசி-யுனிசெஃப் அமைப்பு ஆகியவை இணைந்து பாராட்டுச் சான்றிதழை வழங்கும்.

இளம் தீரா் இயக்கத்தில் இணையும் உறுப்பினா்களுக்கு யுஜிசி- யுனிசெஃப் சாா்பில் கரோனா தொற்றை ஒழிப்பது குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும். இந்த இயக்கத்தில் சேர விரும்புவோா் வர என ‘டைப்’ செய்து 9650414141 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்ப வேண்டும். 8066019225 என்ற எண்ணுக்கு ‘மிஸ்டு கால்’ கொடுத்தும் இணையலாம் என அதில் கூறியுள்ளாா். இதேபோன்று பள்ளி மாணவா்களுக்கான ‘இளம் தீரா்’ இயக்கத்தை சிபிஎஸ்இ ஏற்கெனவே அறிமுகப்படுத்தி கரோனா தொடா்பான பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT