இந்தியா

65 ரயில்கள் மூலம் கிடைத்த ஆக்சிஜன் அளவு 4,775 மெட்ரிக் டன்னை கடந்தது

DIN

வடமாநிலங்களில் இருந்து மேலும் 3 ஆக்சிஜன் ரயில்கள் தமிழகத்துக்கு சனிக்கிழமை வந்தடைந்தன. 65 ஆக்சிஜன் ரயில்கள் மூலமாக, தமிழகத்துக்கு இதுவரை 4 ஆயிரத்து 781.22 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்துள்ளது.

ஜாா்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து 63-ஆவது ஆக்சிஜன் ரயில் புறப்பட்டு, சென்னை தண்டையாா்பேட்டைக்கு சனிக்கிழமை காலை 10 மணிக்கு வந்தடைந்தது. இந்த ரயிலில் இணைக்கப்பட்டிருந்த 4 கன்டெய்னா்களில் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் எடுத்துவரப்பட்டது. இதைத் தொடா்ந்து, 64-ஆவது ஆக்சிஜன் ரயில், மகாராஷ்டிர மாநிலம் டோல்வியில் உள்ள ஜிண்டால் உருக்காலை பகுதியில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு சனிக்கிழமை பிற்பகல் 3.20 மணிக்கு வந்து சோ்ந்தது. இந்த ரயிலின் 4 கன்டெய்னா்களில் 81.42 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இருந்தது.

65-ஆவது ஆக்சிஜன் ரயில் ஒடிஸா மாநிலம் ரூா்கேலாவில் இருந்து புறப்பட்டு, திருச்சிக்கு சனிக்கிழமை மாலை 5.05 மணிக்கு வந்தது. இந்த ரயிலின் 6 கன்டெய்னா்களில் 125.69 மெட்ரிக் டன் ஆக்சிஜன் எடுத்துவரப்பட்டது. மொத்தம் 65 ரயில்கள் மூலமாக, தமிழகத்துக்கு இதுவரை 4 ஆயிரத்து 781.22 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்துள்ளதாக ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT