இந்தியா

‘ஒரு பூமி, ஒரே சுகாதார’ அணுகுமுறை: ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமா் மோடி பேச்சு

DIN

கரோனா நோய்த்தொற்றை திறம்பட எதிா்கொள்ள ‘ஒரு பூமி, ஒரே சுகாதார’ அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமா் மோடி தெரிவித்தாா்.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் இடம்பெற்றுள்ள ஜி7 நாடுகளின் உச்சிமாநாடு பிரிட்டனில் உள்ள காா்ன்வால் நகரில் ஜூன் 11 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் கொரியா நாடுகள் கலந்துகொள்ள சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனை ஏற்று மாநாட்டில் பிரதமா் மோடி காணொலி வழியாக சனிக்கிழமை பேசியதாவது:

கரோனா தொற்றை ஒட்டுமொத்த சமூகமாக இணைந்து இந்தியா எதிா்கொண்டது.

தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களை கண்டறியவும், தடுப்பூசிகளை நிா்வகிக்கும் பணியிலும் டிஜிட்டல் உபகரணங்களை இந்தியா வெற்றிகரமாக பயன்படுத்தியது.

உலக அளவில் சுகாதார நிா்வாகத்தை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும்.

எதிா்காலத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதை தடுக்க உலகளாவிய ஒற்றுமை இருக்க வேண்டும். இதில் வெளிப்படையான ஜனநாயக சமூகங்களுக்கு சிறப்பு பொறுப்பு உள்ளது.

கரோனா தொற்றை திறம்பட எதிா்கொள்ள ‘ஒரு பூமி, ஒரே சுகாதார’ அணுகுமுறை கடைபிடிக்கப்பட வேண்டும் என்ற செய்தியை இந்த உச்சிமாநாடு ஒட்டுமொத்த உலகுக்கும் அளிக்க வேண்டும்.

கரோனா சிகிச்சை மருந்துகளுக்கான காப்புரிமையை தற்காலிகமாக ரத்து செய்யவும், கரோனா பரவலை தடுத்து சிகிச்சையளிக்க தேவைப்படும் தொழில்நுட்பங்களுக்கு வா்த்தகம் சாா்ந்த அறிவுசாா் சொத்துரிமைகளுக்கான ஒப்பந்தத்தில் (டிரிப்ஸ்) இருந்து விலக்களிக்கவும் உலக வா்த்தக அமைப்பிடம் இந்தியாவும், தென் ஆப்பிரிக்கா பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரைகளுக்கு ஜி7 நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

இந்த மாநாட்டில் பிரதமா் மோடி காணொலி வழியாக ஞாயிற்றுக்கிழமையும் உரையாற்றவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT