இந்தியா

மத்திய அரசின் இ-மெயில் அமைப்பில் சைபர் அத்துமீறல் நடைபெறவில்லை: மத்திய அரசு விளக்கம்

13th Jun 2021 09:22 PM

ADVERTISEMENT


புதுதில்லி: தேசிய தகவல் மையம் சாா்பில் நிர்வகிக்கப்பட்டு வரும் மத்திய அரசின் இ-மெயில்கள் அமைப்பில் சைபர் அத்துமீறல் எதுவும் நடைபெறவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா, பிக் பாஸ்கெட், டோமினோஸ் உள்ளிட்ட கணிப்பொறி தரவுகளில்  மா்ம நபா்கள் ஊடுருவியதாகவும், தேசிய தகவல் மையம் நிர்வகிக்கும் மத்திய அரசின் இ-மெயில்கள் மற்றும் கடவுச்சொற்களை, கணினி ஊடுருவல்காரர்களுக்கு தெரிவித்துவிட்டதாக ஊடகங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தது.  

இந்நிலையில், மத்திய அரசின் மின்னணுவியல்-தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், 
தேசிய தகவல் மையம் நிர்வகிக்கும் மத்திய அரசின் இ-மெயில் அமைப்பில் எந்த கணிப்பொறி தரவுகளிலும் சைபர் அத்துமீறல்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும்,  மத்திய அரசின் இ-மெயில் அமைப்பு முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது.

அரசு இ-மெயில் முகவரிகளை பயன்படுத்துபவர்கள் வெளிப்புற இணையதளங்களில், அரசு இ-மெயில் முகவரியை பதிவு செய்து அதே கடவுச் சொல்லை பயன்படுத்தியிருந்தால் தவிர, தனியாா் நிறுவனங்களின் இணையதளங்களில் நடைபெறும் கணிப்பொறி பாதுகாப்பு அத்துமீறல்கள், அரசு இ-மெயில் சேவையை பயன்படுத்துவோருக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

ADVERTISEMENT

தேசிய தகவல் மையம் நிர்வகிக்கும் இ-மெயில் அமைப்பில் பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் மற்றும் 90 நாள்களுக்கு ஒரு முறை கடவுச்சொல்லை மாற்றும் வசதிகள் உள்ளன.

மேலும், தேசிய தகவல் மையம் இ-மெயிலில் கடவுச் சொல்லை மாற்ற வேண்டும் என்றால், பதிவு செய்ய்பட்ட செல்லிடப்பேசி எண்ணுக்கு கடவுச்சொல்(ஓடிபி) அவசியம். இந்த கடவுச் சொல் தவறாக இருந்தால், அவற்றை மாற்றுவது அவ்வளவு சாத்தியமானதல்ல. மத்திய அரசின் என்ஐசி இ-மெயில்களை பயன்படுத்தி தகவல்களை திருடும் எந்த முயற்சியையும் தேசிய தகவல் மையத்தால் குறைக்க முடியும். 

கணினி பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்தும், ஊடுருவல் அபாயம் குறித்தும் அதிலிருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்தும் அரசு இ-மெயில் முகவரிகளை பயன்படுத்துவோருக்கு அவ்வப்போது விழிப்புணர்வு நடவடிக்கைகளை என்ஐசி மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது.

Tags : Government clarifies NIC email system hackers
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT