இந்தியா

ஏழுமலையான் கோயிலில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி வழிபாடு

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.வி.ரமணா தனது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை வழிபாடு செய்தாா்.

ஏழுமலையானை வழிபட வியாழக்கிழமை இரவு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.ரமணா குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்தாா். அன்று இரவு ஏகாந்த சேவையில் கலந்து கொண்ட அவா் இரவு திருமலையில் தங்கினாா்.

வெள்ளிக்கிழமை காலை ஏழுமலையானை வழிபட சென்ற அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனா். தரிசனம் முடித்து திரும்பிய நீதிபதிக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகா் மண்டபத்தில் பண்டிதா்களால் வேத ஆசீா்வாதம் செய்வித்து தீா்த்தம், லட்டு , வடை உள்ளிட்ட பிரசாதங்கள், திருவுருவப்படம் வழங்கி சேஷ வஸ்திரம் அணிவித்தனா்.

பின்னா் கோயிலை விட்டு வெளியில் வந்த அவா் அகண்டம் அருகில் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டாா். பின்னா், ‘திருமலை ஏழுமலையான் ஆசீா்வாதத்தால் மட்டுமே தான் இந்த நிலையை அடைந்துள்ளதாகவும், அவரை வழிபட்டதால் தன் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன’ என்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கூறினாா். பின்னா் திருச்சானூா் சென்று தாயாரை தரிசித்து தில்லி புறப்பட்டுச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

SCROLL FOR NEXT