இந்தியா

காஷ்மீரின் சோபூர் தாக்குதல்: முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம்

12th Jun 2021 04:18 PM

ADVERTISEMENT

ஜம்மு - காஷ்மீரின் சோபூரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் சோபூரில் உள்ள அரம்போரா பகுதியில் தீவிரவாதிகளால் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 2 காவலர்கள் மற்றும் 2 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். 

இந்த சம்பவம் குறித்து ஐ.ஜி. விஜய் குமார் கூறியது, லஷ்கர் இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 காவலர்கள், 2 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். 

மேலும் தப்பியோடிய தீவிரவாதிகளை ராணுவம் மற்றும் காவல்துறை இணைந்து தேடி வருவதாக தெரிவித்தார். இந்த நிலையில் சோபூர் தாக்குதலுக்கு முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

மேலும் காயமடைந்தவர்களுக்காக பிரார்த்திப்பதாக குறிப்பிட்ட அவர் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
 

 

Tags : omar abdullah
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT