இந்தியா

காஷ்மீர் கிராமங்களில் இரவில் தடுப்பூசி போடும் திட்டம் வெற்றி

ENS


ஸ்ரீநகர்: வடக்கு காஷ்மீரின் பந்திபோராவில் உள்ள மூன்று கிராமங்களில் சுகாதாரத் துறையினரால் செயல்படுத்தப்பட்ட இரவு நேரத்தில் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் வெற்றி கண்டுள்ளது.

அதிகாலையில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் ஆண்கள் மாலைக்குப் பிறகே வீடு திரும்புகிறார்கள். எனவே பந்திபோராவில் உள்ள மூன்று கிராமங்களுக்கும் இரவு நேரத்தில் சுகாதாரப் பணியாளர்கள் சென்று கரோனா தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டனர்.

இதன் மூலம், வடக்கு காஷ்மீர் மாவட்டங்களில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

பந்திபோராவில் உள்ள குதாரா, சும்லர், சந்தாஜி ஆகிய மூன்று கிராமங்களிலும், இரவு 7 மணி முதல் 11 மணி வரை கரோனா தடுப்பூசி போடும் முகாம் நடத்தப்பட்டது. பகலில் அந்தக் கிராமத்தில் பெரும்பாலான மக்கள் பணிக்குச் சென்று விடுவதால், நாங்கள் இப்படி மாற்றி யோசித்தோம். எங்களைத் தேடி அவர்கள் வர முடியாது, அவர்களைத் தேடி நாம் போகும் போது அவர்கள் இருக்க வேண்டும் என்பதால், இரவு நேரத்தை தேர்வு செய்தோம்.

இந்தப் பணிக்காக, சுகாதாரத் துறையினர், சாலை வசதி இல்லாத இந்த கிராமங்களுக்கு பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றுள்ளனர். கிராம மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்காக இரவு முழுவதும் அங்கேயே தங்கியிருந்து தங்களது பணியை செய்துள்ளனர். 

இவ்வாறு இரவு நேரத்தில் தடுப்பூசி போடும் பணியை நாங்கள் மேற்கொள்ளாவிட்டால் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தியிருக்க முடியாது. இந்த முகாமின் போது 370 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தொடர்ந்து இப்பணி நடைபெறுகிறது. 100 சதவீதத்தை எட்டிவிடுவோம் என்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருவள்ளூா்: 14 வேட்புமனுக்கள் ஏற்பு, 19 நிராகரிப்பு

தேமுதிக வேட்பாளா் அறிமுக கூட்டம்

உடலில் அலகு குத்தி அம்மன் வீதியுலா சென்ற பக்தா்கள்

முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1.05 கோடி

SCROLL FOR NEXT