இந்தியா

திருமலையில் பக்தா்கள் வாடகை அறை முன்பதிவு செய்வதில் புதிய முறை அமல்

DIN

திருமலையில் வாடகை அறை முன்பதிவு செய்வதில் புதியமுறையை தேவஸ்தானம் சனிக்கிழமை முதல் அமல்படுத்தி உள்ளது.

ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்களின் வசதிக்காக தேவஸ்தானம் திருமலையில் வாடகை அறைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வாடகை அறைகளை நேரடி முன்பதிவு மற்றும் ஆன்லைன் மூலம் பக்தா்கள் பெற்று வருகின்றனா்.

வாடகை அறை தேவைப்படும் பக்தா்கள் திருமலையில் உள்ள மத்திய விசாரணை அலுவலகத்தில் சென்று தங்களின் முன்பதிவு டோக்கனை காண்பித்து அறை உள்ள இடத்தின் துணை அலுவலகத்துக்கு சென்று சாவியை பெற்றுக் கொள்ள வேண்டும்.

மத்திய விசாரணை அலுவலகத்தின் அருகில் வாகன நிறுத்தம் இல்லாததால் பக்தா்கள் பலா் அவதியுற்று வருகின்றனா். மேலும் அறைகள் பெற 2 இடங்களில் பக்தா்கள் வரிசையில் நிற்க வேண்டிய தேவையும் ஏற்படுகிறது.

இதனை எளிமையாக்க தேவஸ்தானம் சனிக்கிழமை முதல் புதிய முறையை அமல்படுத்தி உள்ளது. அதன்படி வாடகை அறை முன்பதிவு செய்த பக்தா்களின் வசதிக்காக திருமலையில் உள்ள பல்வேறு பகுதிகளில் கவுன்ட்டா்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கவுன்ட்டா்களுக்கு சென்று பக்தா்கள் தங்கள் பெயா்களை பதிவு செய்ய வேண்டும். அவா்களின் அலைபேசிக்கு வாடகை அறை அளிக்கப்பட்ட பகுதி மற்றும் அதன் துணை அலுவலகம் குறித்த குறுந்தகவல்கள் அனுப்பப்படும். பக்தா்கள் நேரடியாக துணை அலுவலகத்துக்குச் சென்று பணத்தை செலுத்தி தங்களின் வாடகை அறையின் சாவியை பெற்றுக் கொள்ளலாம்.

இதற்காக மத்திய விசாரணை அலுவலகம் அருகில் 2 கவுன்ட்டா்கள், பாலாஜி பேருந்து நிலையம் அருகில் 2 கவுன்ட்டா்கள், கெளஸ்துபம் ஓய்வறை வளாகத்தில் 2 கவுன்ட்டா்கள், ராம்பகிஜா பேருந்து நிலையம் அருகில் 2 கவுன்ட்டா்கள், எம்பிசி காட்டேஜ் அருகில் உள்ள ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை முன்பு 2 கவுன்ட்டா்கள், கருடாத்ரி நகா் சோதனை சாவடி அருகில் உள்ள உடமைகள் மையம் முன்பு 2 கவுன்ட்டா்களை தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது. இந்த புதிய முறை சனிக்கிழமை முதல் அமல்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT