இந்தியா

குழந்தைத் தொழிலாளர் பற்றி பென்சில் தளம், 1098-ல் புகார் செய்யலாம்: ஸ்மிருதி இராணி

12th Jun 2021 04:55 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: குழந்தைத் தொழிலாளர் முறை தொடர்பான சம்பவங்களை பொதுமக்கள் பென்சில் தளம் அல்லது குழந்தை உதவி எண்ணான 1098- ற்கு புகார் அளிக்குமாறு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஜவுளி அமைச்சர் ஸ்மிருதி சுபின் இராணி கேட்டுக்கொண்டுள்ளார்.

உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “கல்வி மற்றும் மகிழ்ச்சியான குழந்தைப்பருவத்தைப் பெறுவதற்கு ஒவ்வொரு குழந்தைக்கும் உரிமை உள்ளது. உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தன்று குழந்தைத் தொழிலாளர் முறையை ஒடுக்கும் நமது உறுதித்தன்மையை மீண்டும் வலியுறுத்துவோம். நமது குழந்தைகளுக்கு உரித்தான குழந்தைப் பருவம் அவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வதில், மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு சுட்டுரைச் செய்தியில், “குழந்தைத் தொழிலாளர் சம்பவங்கள் தொடர்பாக https://pencil.gov.in/ என்ற பென்சில் தளத்திலோ அல்லது 1098 என்ற குழந்தை உதவி எண்ணிலோ தெரிவிக்குமாறு ஒவ்வொருவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால்... நமது குழந்தைகளுக்கு- நம் நாட்டின் எதிர்காலத்திற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம்”, என்று அமைச்சர் ஸ்மிருதி இராணி குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் நோக்கத்துடன் கடந்த 2002-ஆம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் அமைப்பு இந்த நாளை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
 

Tags : child labour Smriti Irani
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT