இந்தியா

கருப்புப் பூஞ்சை மருந்துக்கு ஜிஎஸ்டி ரத்து: நிர்மலா சீதாராமன்

12th Jun 2021 04:58 PM

ADVERTISEMENT


கருப்புப் பூஞ்சை தொற்றுக்குப் பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின் பி மருந்துக்கு ஜிஎஸ்டி ரத்து செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை அறிவித்தார்.

நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு மருத்துவப் பொருள்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.

ஆம்போடெரிசின் பி மற்றும் டோசிலிசுமாப் மருந்துகளுக்கு விதிக்கப்பட்டு வந்த 5 சதவிகித ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ரெம்டெசிவிர் மற்றும் ஹெபரின் போன்ற மருந்துகளுக்கான ஜிஎஸ்டி 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர் உள்ளிட்ட சாதனங்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பல்ஸ் ஆக்சிமீட்டர், சானிடைசர்ஸ், வெப்ப பரிசோதனை கருவி உள்ளிட்டவற்றின் ஜிஎஸ்டியும் 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT